17 October 2022

தேவையுள்ள மக்களுக்கு எப்படி உதவுவது? சமூக ஊடகங்கள் எனக்கு உதவ முடியுமா?

Start Chat

உலக வங்கியின் (2021) அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் 9.2% பேர் வறுமையில் வாழ்கின்றனர். உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் இந்தப் பிரச்சனையுடன் போராடுவதால், வறுமைப் பிரச்சினை உலகிற்குப் புதிதல்ல.

2015-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் 193 நாடுகள், நாட்டில் நிலவும் கடும் வறுமையை ஒழிப்பதையும் சமத்துவமின்மையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட 2030 செயல்திட்டத்தில் கையெழுத்திட்டன.

வெவ்வேறு நாடுகள் அவற்றின் அரசாங்க மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் வறு ஒழிப்பு இலக்கை அடைவதற்காக அமைப்புகள் பல திட்டங்களை வகுத்துள்ளன. அதுமட்டுமின்றி, 2030 செயல்திட்டத்தை அடைவதற்குப் பொதுமக்களில் பலரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்த முன்வந்துள்ளனர்.

தேவையுள்ளவர்களுக்கு எப்படி உதவுவது?

ஒரு தனிநபராக, தேவையுள்ளவர்களுக்கு உதவ பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றுள் சில:

  • தொண்டு நிறுவனங்களுக்கும் நிவாரண நிதிகளுக்கும் பண நன்கொடைகள் வழங்குதல்
  • தொண்டு நிறுவனங்களுக்குப் பொருளாக வழங்கப்படும் நன்கொடைகள் (ஆடைகள், பொம்மைகள் போன்றவை)
  • தொண்டு நிறுவனங்களில் தன்னார்வப் பணி செய்தல்
  • பல்வேறு தளங்கள் மற்றும் பலவற்றின் மூலம் விழிப்புணர்வைப் பரப்புதல்

நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் தளங்களின் உதவியால் நன்கொடையாளர்களும் தொண்டு நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் எளிதாகத் தொடர்பு கொள்ள முடிவதே இந்த அதிகரிப்பிற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

எனவே, இணையவழி நன்கொடைகளைப் பயன்படுத்தும் நன்கொடையாளர்களின் வளர்ச்சியை நாம் பார்க்கும்போது , இந்த முறையின் பயன்பாட்டில் விரைவான வளர்ச்சியை வெளிப்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இணையவழி நன்கொடைகள் எவ்வாறு செய்யப்படுகின்றன?

தற்போது, இந்தியாவில் இணையவழி நன்கொடைகளை ஏற்கும் லட்சக்கணக்கான நிதி திரட்டும் இணையதளங்களும் , தன்னார்வ தொண்டு நிறுவன இணையதளங்களும் உள்ளன . பல அரசுத் திட்டங்கள் மற்றும் நிதிகளுக்கும் கூட, மக்கள் இணையவழியில் நன்கொடை அளிக்கக்கூடிய சொந்த இணையதளங்கள் உள்ளன .

அதுமட்டுமின்றி, இந்தத் தொண்டு நிறுவனங்கள் பேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களையும் பயன்படுத்துகின்றன; அவற்றின் மூலம் இணையவழி நன்கொடைகளை வழங்கவும் விளம்பரப்படுத்தவும் முடியும்.

சமூகப் பணிக்காக சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துதல்

மக்களுடன் தொடர்புகொள்வதே சமூக ஊடகங்களின் முக்கிய நோக்கமாகும். எனவே, பல இலாப நோக்கற்ற மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள், மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடையவும், அவர்களுடன் தங்கள் நோக்கத்தைப் பகிர்ந்துகொள்ளவும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துகின்றன . வேறுவிதமாகக் கூறினால், இந்த சமூக வலைதளங்கள் தங்கள் நிறுவனங்களை விளம்பரப்படுத்தவும், சந்தைப்படுத்தவும், மக்கள் தொடர்புகளைப் பேணவும் மற்றும் நிதி திரட்டவும் ஒரு சிறந்த வழியாகும் .

ஒருவர் சமூக ஊடகங்கள் மூலம் தேவையுள்ளவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?

நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பும் அறக்கட்டளை அல்லது நிறுவனங்களைக் கண்டறிய இந்தத் தளங்களைப் பயன்படுத்தலாம் . இந்தத் தளங்கள் நன்கொடையாளர் மற்றும் நிறுவனம் ஆகிய இரு தரப்பிலிருந்தும் தொடர்புகொள்ள உதவுவதால், ஒரு நன்கொடையாளர் தான் விரும்பும் தொண்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்வது மிகவும் எளிதாக இருக்கும் .

அமைப்புகள் தங்கள் பணிக்காகத் தன்னார்வலர்களை ஏற்றுக்கொள்கின்றனவா என்பதைச் சரிபார்க்க இந்த சமூக ஊடகத் தளங்களையும் பார்க்கலாம் .

அதுமட்டுமின்றி, நன்கொடையாளர்கள் இந்தத் தளங்களில் நிதி திரட்டும் இடங்களைத் தேடலாம் அல்லது தங்களின் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பிரச்சாரங்களையும் முன்னெடுக்கலாம்.

தொண்டு நிறுவனங்கள் மீது சமூக ஊடக தளங்களின் தாக்கம்

அமைப்புகள் தங்கள் கதைகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்வதும், தங்களின் உன்னத நோக்கத்திற்காகப் பொதுமக்களிடமிருந்து பங்களிப்புகளைக் கோருவதும் மிகவும் எளிதாகிவிட்டது .

ஆய்வுகளின்படி, உலகளவில் 18% நன்கொடையாளர்கள் ஃபேஸ்புக்கில் உள்ள நிதி திரட்டும் கருவிகள் மூலம் நன்கொடை அளித்துள்ளனர், மேலும் அவர்களில் 88% பேர் இந்தக் கருவிகள் வழியாக மீண்டும் நன்கொடை அளிக்க வாய்ப்புள்ளது. இதேபோல், 30% இலாப நோக்கற்ற நிறுவனங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் பணத்தையும் விழிப்புணர்வையும் திரட்டுகின்றன .

நன்கொடையாளர்கள் மீது சமூக ஊடகங்களுக்கு உள்ள வலிமையான செல்வாக்கை இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. எனவே, சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், தேவையுள்ளவர்களுக்கு நிச்சயமாகப் பெரிதும் உதவ முடியும் என்று கூறுவது சரியாக இருக்கும்!

X
Amount = INR